/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரியத்தில் கட்டணமின்றி பெயர் மாற்றம்
/
வாரியத்தில் கட்டணமின்றி பெயர் மாற்றம்
ADDED : அக் 03, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில், 13.85 லட்சம் பேர் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துகின்றனர். இதுவரை, பெயர் மாற்றம், பெயர் திருத்தம் மேற்கொள்ள, வாரியம் 100 ரூபாய் கட்டணமாக வசூலித்தது.
இம்மாதம் முதல், கட்டணம் இல்லாமல், உரிய ஆவணங்களை இணைத்து, குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் பெயர் மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.

