sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

7 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

/

7 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

7 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

7 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்


ADDED : அக் 25, 2025 11:25 PM

Google News

ADDED : அக் 25, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கர்நாடக மாநிலம், பெங்களூரு கன்டோன்மெண்ட் பகுதியில், ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, வரும் 30ம் தேதி, கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சென்னை சென்ட்ரல் உட்பட, ஏழு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

 கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து இரவு 10:40 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், வரும் 30ம் தேதி யஸ்வந்த்பூர், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு மாற்றுப்பாதை வழியாக சென்னைக்கு இயக்கப்படும்

 கர்நாடகா மாநிலம் அசோகபுரத்தில் இருந்து 30ம் தேதி புறப்படும் காவேரி விரைவு ரயில், மாற்றுப்பாதையில் சென்னைக்கு இயக்கப்படும். பெங்களூரு கன்டோன்மெண்ட் செல்லாது

 மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில், மைசூர் - ரேணிகுண்டா விரைவு ரயிலும் வரும் 30ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்குவதால், பெங்களூரு கன்டோன்மெண்ட் செல்லாது

 திருநெல்வேலி - மைசூர் மாலை 3:40 மணி விரைவு ரயில் வரும் 28ம் தேதி, 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்

 சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் இரவு 9:15 மணி ரயில், வரும் 30ம் தேதி, 75 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்

 ஆந்திரா மாநிலம் திருப்பதி - கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் இரவு 9:40 மணி ரயில் வரும் 30ம் தேதி, 45 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

குண்டக்கலுக்கு சிறப்பு ரயில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து, ஆந்திர மாநிலம், குண்டக்கல் இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் நவ., 19, 21ம் தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 2:15 மணிக்கு, குண்டக்கல் செல்லும்

 குண்டக்கலில் இருந்து நவ., 20, 22ம் தேதிகளில் மாலை 5:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:45 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்

 கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து வரும் நவ., 19, 21ம் தேதிகளில் மாலை 6:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு சத்யசாய் பி நிலையத்தை சென்றடையும்.

 சத்யசாய் பி நிலையத்தில் இருந்து நவ., 20, 22ம் தேதிகளில் இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 3:55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.

சேவை மாற்றம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் வரும் 28ம் தேதி நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், திண்டிவனம் வரை இயக்கப்படும்

 விழுப்புரம் - சென்னை கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us