/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெயிலின் உஷ்ணத்தை குறைக்க ஏழு இடங்களில் 'சாரல் பாயின்ட்' வண்டலுார் பூங்கா நிர்வாகம் ஏற்பாடு

ADDED : மார் 21, 2025 12:11 AM
தாம்பரம், தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக உள்ள வண்டலுார் பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இங்கு, பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகையிலான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மீன் காட்சியகம், பட்டாம்பூச்சி குடில், இரவு நேர விலங்கு உலாவிடம் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இப்பூங்காவிற்கு, வார நாட்களில், 2,500 முதல் 3,000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். தொடர் விடுமுறை வரும் போது, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், ஐந்து கி.மீ., துாரம் பேட்டரி வாகனத்திலும், நடந்து சென்றும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். தற்போது, கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக நடந்து செல்வோர், அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, பூங்காவின் ஏழு முக்கிய இடங்களில், பார்வையாளர்கள் வசதிக்காக, 'சாரல் பாயின்ட்' அமைக்கப்பட்டு வருகிறது.
நடந்து செல்வோரும், பேட்டரி வாகனங்களில் செல்வோரும், அந்த பாயின்டில் சென்று நின்றதும், அவர்கள் மீது சாரல் சுற்றி அடிக்கும்.
இதன் வாயிலாக, பார்வையாளர்கள் சிறிது நேரம் நின்று இளைப்பாறுவதோடு, வெயிலின் உஷ்ணமும் குறையும்.
குறிப்பாக, சிறுவர்களுக்கு இது ஜாலியாக இருக்கும். ஓரிரு நாட்களில், இந்த சாரல் பாயின்ட் பயன்பாட்டிற்கு வரும் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.