/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முறைகேடாக ஆவணம் தயாரித்த வழக்கில் பங்களாதேஷ் நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ADDED : பிப் 02, 2024 07:34 AM
பூந்தமல்லி: தமிழகத்தில் தங்கி, முறைகேடாக அரசு ஆவணங்களை தயாரித்து, சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக என்.ஐ.ஏ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. போலீசார் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், படப்பை ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த பாபு, 26 ; நூர் கரீம், 26 மற்றும் சகாபுதின் உசேன், 27 ; ஆகியோர், இந்தியாவில் முறைகேடாக தங்கி, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது.
என்.ஐ.ஏ. போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் கைது செய்தபோது கிடைத்த பொருட்கள் அடிப்படையில், நீதிபதி இளவழகன் முன், என்.ஐ.ஏ. போலீசார், நேற்று முன்தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.