/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவம் கரையோரம் ரசாயன கழிவு மதுரவாயலில் தொற்று பீதி
/
கூவம் கரையோரம் ரசாயன கழிவு மதுரவாயலில் தொற்று பீதி
கூவம் கரையோரம் ரசாயன கழிவு மதுரவாயலில் தொற்று பீதி
கூவம் கரையோரம் ரசாயன கழிவு மதுரவாயலில் தொற்று பீதி
ADDED : ஜன 24, 2025 12:30 AM

மதுரவாயல், மதுரவாயல் அருகே கூவம் ஆற்றங்கரையோரம் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரவாயல் மற்றும் அடையாளம்பட்டு ஊராட்சி பகுதிகளில், கூவம் ஆறு கரையோரம் குப்பை கொட்டப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.
அதேபோல், தனியார் கழிவுநீர் லாரிகளில் இருந்து இப்பகுதியில் கழிவுநீர் வெளியேற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், அடையாளம்பட்டு கூவம் ஆற்றங்கரையோரம், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், லாரிகள் வாயிலாக நள்ளிரவில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன.
இந்த கழிவுகள் ரசாயன வாடையுடன் துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகளால் எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயம் இருப்பதால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.