/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில செஸ் போட்டியில் செங்கை வீரர்கள் அபாரம்
/
மாநில செஸ் போட்டியில் செங்கை வீரர்கள் அபாரம்
ADDED : அக் 01, 2025 03:20 PM

சென்னை:
மாநில அளவிலான செஸ் போட்டியின் பல்வேறு பிரிவுகளில், செங்கல்பட்டு மாவட்ட வீரர் - வீராங்கனையர் அபாரமாக விளையாடி முதலிடங்களை பிடித்தனர்.
ஜி.கே.எம்., குரூப் ஆப் இன்ஸ்டிடியூட், ஸ்ரீ ஹயக்ரீவர் செஸ் அகாடமி இணைந்து, மாநில அளவிலான செஸ் போட்டியை, பெருங்களத்துாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடத்தின.
போட்டியில், எட்டு, பத்து, 13 மற்றும் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட மாநில முழுதும் இருந்து, 250 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
இதில், எட்டு வயது பிரிவில் சென்னையைச் சேர்ந்த சாய் அத்விக், மாணவியரில் காஞ்சிபுரம் யாஷிகா; பத்து வயதில் மாணவரில் செங்கல்பட்டு கவின், மாணவியரில் செங்கல்பட்டு செல்வபூரணி ஆகியோர் முதலிடங்களை பிடித்தனர்.
அடுத்து, 13 வயது பிரிவில், மாணவரில் செங்கல்பட்டு பிரிதீவ் ஆரோக்கிதாஸ், மாணவியரில் செங்கல்பட்டு தன்மயா மற்றும் 25 வயது ஆண்களில் நெல்லை மணிகண்ட பிரபு, மாணவியரில் சென்னை கீர்த்தி வர்ஷா ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர்.
வெற்றி பெற்றோருக்கு, தாம்பரம் ஆயுதப்படை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், ஜி.கே.எம்., கல்லுாரி முதல்வர் புவனேஷ்வரி, செங்கல்பட்டு சதுரங்க செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், பரிசுகள் வழங்கி பாராட்டினர்.