/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சென்னை ஒன்' செயலி மூலம் 8 நாளில் 18,000 டிக்கெட்
/
'சென்னை ஒன்' செயலி மூலம் 8 நாளில் 18,000 டிக்கெட்
ADDED : அக் 01, 2025 03:24 PM
சென்னை:
'சென்னை ஒன்' செயலி வாயிலாக, எட்டு நாட்களில், 18,000 பேர் டிக்கெட் எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் போக்கு வரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் செயல்பட்டு வருகிறது.
இந்த குழுமம் சார்பில், ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து, புறநகர் மின்சார ரயில் சேவைகளை பயன்படுத்த, 'சென்னை ஒன்' என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது.
இந்த செயலி, செப்., 22ல் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில், 2 லட்சம் பேர் இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதி விறக்கம் செய்தனர்.
நாளொன்றுக்கு, 2,000 முதல், 3,000 பேர் டிக்கெட் எடுத்து பயணங்களை மேற்கொள்வதாக தெரிய வந்துள்ளது.
கடந்த எட்டு நாட்களில், இந்த செயலி வாயிலாக, 18,000 பேர் டிக்கெட் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.