ADDED : அக் 01, 2025 03:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:
கூடுவாஞ்சேரியில், சாலையில் நடந்து சென்ற முதியவர், பைக் மோதி பலியானார்.
கூடுவாஞ்சேரி, ராஜிவ்காந்தி நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக், 76: இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் சாலையில் நடந்து வந்தார்.
அப்போது, கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் நோக்கி வந்த 'ஸ்பிளண்டர்' பைக், அப்துல் ரசாக் மீது மோதியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்துல் ரசாக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பைக்கை ஓட்டிவந்த, திருக்கோவிலுாரைச் சேர்ந்த ஞானசேகரன், 20, என்ற வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.