/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கல்வராய நாயக்கர் 197வது பிறந்தநாள் விழா
/
செங்கல்வராய நாயக்கர் 197வது பிறந்தநாள் விழா
ADDED : ஏப் 10, 2025 11:59 PM

சென்னை, வள்ளல் பெ.தெ.லீ.செங்கல்வராய நாயக்கரின்,197வது பிறந்தநாள் விழா, சென்னை, வேப்பேரியில் நேற்று நடந்தது.
பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவரும், முன்னாள் நீதிபதியுமான கலையரசன் தலைமையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, செங்கல்வராய நாயக்கரின் சிலைக்கு, நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கல்லுாரியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவ முகாமில், 500க்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர்; 50 பேர் ரத்ததானம் வழங்கினர். மதியம் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரசேகரன், மருத்துவர் கண்ணையன், பொறியாளர் வெங்கடேஷ், முனைவர் அரிஸ்டாட்டில், செயலர் சாம்பசிவம், கல்வி ஆலோசகர் முனைவர் மின்ராஜ், பொறியியல் ஆலோசகர் ஜெகன்னாதன், நிர்வாகிகள் ரேணுகா, ராஜேந்திரன், விஜயசுந்தரம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக, கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் இளந்தமிழன் வரவேற்றார். பல்தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் வெங்கட்ராமன் நன்றி கூறினார்.
அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், 'பெ.தெ.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் கீழ், பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இலவச ஐ.ஏ.எஸ்., அகாடமி வழியாக, பலர் உயர் பதவிகளில் உள்ளனர். கல்வி நிறுவனங்களுடன், பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்' என்றனர்.
***

