/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - அரக்கோணத்திற்கு விரைவில் 'ஏசி' ரயில் சேவை
/
சென்னை - அரக்கோணத்திற்கு விரைவில் 'ஏசி' ரயில் சேவை
சென்னை - அரக்கோணத்திற்கு விரைவில் 'ஏசி' ரயில் சேவை
சென்னை - அரக்கோணத்திற்கு விரைவில் 'ஏசி' ரயில் சேவை
ADDED : ஜூலை 19, 2025 12:23 AM
சென்னை, சென்னை கடற்கரை -செங்கல்பட்டு தடத்தை தொடர்ந்து, சென்னை - அரக்கோணத்திற்கு 'ஏசி' ரயில் சேவை துவங்கவுள்ளது.
சென்னையில் முதல் முறையாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், கடந்த ஏப்ரல் மாதம், 'ஏசி' மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது.
துவக்கத்தில், எட்டு சேவை மட்டுமே இயக்கிய நிலையில், பயணியரின் விருப்பத்துக்கு ஏற்ப, நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல் சேவை வழங்கப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக சென்னை கடற்கரை, கிண்டி, தாம்பரம், மாம்பலம், பெருங்களத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, இரண்டாவது 'ஏசி' மின்சார ரயில் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ரயில் அடுத்த மாதம் இறுதிக்குள், சென்னை ரயில் கோட்டத்திடம் ஐ.சி.எப்., ஆலை வழங்க உள்ளது.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'சென்னையில் தற்போது இயக்கப்படும் 'ஏசி' மின்சார ரயிலுக்கு, பயணியரிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது.
'தினமும் 2,800 பேர் பயணம் செய்து வருகின்றனர். இரண்டாவது 'ஏசி' ரயில் சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் இயக்க திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.