/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - கொல்லம் 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
சென்னை - கொல்லம் 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : நவ 15, 2024 01:36 AM
சென்னை, நசபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே, நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 19ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன., 14 வரை, செவ்வாய்கிழமைகளில் இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 2:30 மணிக்கு, கேரளா மாநிலம் கொல்லம் செல்லும்.
மறுமார்க்கமாக, புதன்கிழமைகளில் மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:35 மணிக்கு சென்ட்ரல் வரும்
சென்ட்ரலில் இருந்து, வரும் 23ம் தேதி முதல் ஜன., 18 வரை, சனிக்கிழமைதோறும் இரவு 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 2:30 மணிக்கு கொல்லம் செல்லும்.
மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:35 மணிக்கு சென்ட்ரல் வரும்
சென்ட்ரலில் இருந்து, வரும் 18 முதல் ஜன., 13 வரை, திங்கள் கிழமைகளில் மாலை 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:20 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக, செவ்வாய்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு சென்ட்ரல் வரும்
சென்ட்ரலில் இருந்து, வரும் 20ம் தேதி முதல், ஜன., 15 வரை, புதன்கிழமைகளில் மாலை 3:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:20 மணிக்கு கொல்லம் செல்லும். கொல்லத்தில் இருந்து வியாழன் கிழமைகளில் காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3:30 மணிக்கு சென்ட்ரல் வரும்.
இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.