/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை வீராங்கனை சாதனை
/
மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை வீராங்கனை சாதனை
மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை வீராங்கனை சாதனை
மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை வீராங்கனை சாதனை
ADDED : ஜூன் 09, 2025 02:28 AM

சென்னை:மாநில அளவில் நடக்கும் சீனியர் நீச்சல் மற்றும் டைவிங் போட்டியில் நிதிக் நாதெள்ளா, கவீன்ராஜ் மற்றும் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் ஆகியோர், மூன்று புதிய மாநிலச் சாதனைகளை படைத்து அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 79வது மாநில சீனியர் நீச்சல் மற்றும் டைவிங் போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் நடக்கிறது. இதில் மாநில சீனியர் போட்டி மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவு போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில், நேற்று நடந்த ஆண்களுக்கான சீனியர் பிரிவில் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில், சென்னையின் டர்ட்டில்ஸ் அணியைச் சேர்ந்த நிதிக் நாதெள்ளா 2 நிமிடம் 6.60 வினாடிகளில் பந்தைய துாரத்தை கடந்து, மாநில அளவில் புதிய சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து ஆண்களுக்கான 200 மீ. பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அதே அணியின் வி.கவீன்ராஜ், போட்டி துாரத்தை 2 நிமிடம் 11.11 வினாடிகளில் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
அதேபோல, பெண்களுக்கான 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் எஸ்.டி.ஏ.டி., சென்னை அணி வீராங்கனை பிரமிதி ஞானசேகரன், 2 நிமிடம் 27.28 வினாடிகளில் போட்டி துாரத்தை கடந்து, தன் சொந்தச் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.
கடந்தாண்டு நடந்த மாநில போட்டியில், இவர் 2 நிமிடம் 28.81 வினாடிகளில் போட்டி துாரத்தை கடந்ததே, சாதனையாக இருந்தது.