தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை சிறுவர்கள் சதுரங்கத்தில் அசத்தல்

சென்னை சிறுவர்கள் சதுரங்கத்தில் அசத்தல்

சென்னை சிறுவர்கள் சதுரங்கத்தில் அசத்தல்


UPDATED : அக் 13, 2026 05:15 PM

ADDED : அக் 13, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 05:15 PM ADDED : அக் 13, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநில அளவிலான சதுரங்க போட்டியில், திருவள்ளூர், சென்னை சிறுவர் – சிறுமியர் முதலிடங்களை பிடித்தனர்.

சும்ஹாலா செஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான சிறுவர்கள் சதுரங்க போட்டி, அம்பத்துார், சேது பாஸ்கரா பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், 8, 10, 12, 15 மற்றும் 25 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 13 மாவட்டங்களைச் சேர்ந்த, 651 பேர் பங்கேற்றனர்.

எட்டு வயது சிறுமியர் பிரிவில் திருவள்ளூரை சேர்ந்த சம்ஹிதா; சிறுவர்கள் பிரிவில் வியான் பிரவேரா முதலிடங்களை பிடித்தனர்.

பத்து வயது சிறுமியர் பிரிவில் திருவள்ளூர் அர்ஷியா, சிறுவர்கள் பிரிவில் சென்னை ரிஹான் ஷிராஜ்; 12 வயது சிறுமியர் பிரிவில் திருவள்ளூர் ஹசேனி, சிறுவர்கள் பிரிவில் தீபக் சரண் வெற்றி பெற்றனர். 15 வயது சிறுமியர் பிரிவில் திருவள்ளூர் கார்த்திகா, சிறுவர்கள் பிரிவில் ஷரத்; 25 வயது சிறுமியர் பிரிவில் சென்னை கனிஷ்கா ஜெகதீஷ், சிறுவர்கள் பிரிவில் திருவள்ளூர் சூரியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us