/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாமகிரி தாயாருக்கு தங்கத்தாலி சென்னை தொழிலதிபர் காணிக்கை
/
நாமகிரி தாயாருக்கு தங்கத்தாலி சென்னை தொழிலதிபர் காணிக்கை
நாமகிரி தாயாருக்கு தங்கத்தாலி சென்னை தொழிலதிபர் காணிக்கை
நாமகிரி தாயாருக்கு தங்கத்தாலி சென்னை தொழிலதிபர் காணிக்கை
ADDED : மே 13, 2025 12:32 AM

நாமக்கல் :நாமக்கல் நகரின் மைய பகுதியில், ஒரே கல்லில் உருவான சாளக்கிராம மலையின் மேல் பகுதியில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
கிழக்கு பகுதியில் அரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதர் கோவில் குடைவரை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.
மலையின் மேற்கு பகுதியில் நாமகிரி தாயார் சமேத நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு எதிரே ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக நின்ற நிலையில், நரசிம்மரின் பாதத்தை வணங்கியவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட்நரசிம்மன் என்பவர், கடந்த, 10ம் தேதி, நாமகிரி தாயாருக்கு வெள்ளிக்கொடியில் கோர்த்து செய்யப்பட்ட தங்கத்தாலியை காணிக்கையாக வழங்கினார்.
தங்கத்தாலியின் எடை, 42 கிராம், வெள்ளிக்கொடியின் எடை, 85 கிராம். இதன் மொத்த மதிப்பு, நான்கு லட்சம் ரூபாய்.
இந்த தங்கத்தாலியை நாமகிரி தாயாருக்கு அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. அதில், தொழிலதிபர் வெங்கட்நரசிம்மன், தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.