/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை, கோவை/ போக்சோ குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது
/
சென்னை, கோவை/ போக்சோ குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது
ADDED : ஏப் 11, 2025 11:46 PM

சென்னை,கேரள மாநிலத்தை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரோசித் ராஜீவன் ,31. கற்பழிப்பு, கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில், 2023 மே மாதம் வழக்கு பதிவு செய்து, கோழிக்கோடு போலீசார் இவரை தேடி வந்தனர்.
வெளிநாட்டிற்கு தப்பியதால், தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதுகுறித்த விபரம், விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, ஓமன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர்.
இந்த விமானத்தில், தேடப்படும் குற்றவாளி ரோசித் ராஜீவனும் வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, இவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.
குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து, சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோழிக்கோடு போலீசார் வந்ததும், அவரிடம் ரோசித் ராஜீவன் ஒப்படைக்கப்பட உள்ளார்.