/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை:புகார் பெட்டி ; சீரமைப்பில் விடுபட்ட சாலையால் அவதி
/
சென்னை:புகார் பெட்டி ; சீரமைப்பில் விடுபட்ட சாலையால் அவதி
சென்னை:புகார் பெட்டி ; சீரமைப்பில் விடுபட்ட சாலையால் அவதி
சென்னை:புகார் பெட்டி ; சீரமைப்பில் விடுபட்ட சாலையால் அவதி
ADDED : நவ 14, 2024 02:29 AM

சீரமைப்பில் விடுபட்ட சாலையால் அவதி
பெரும்பாக்கம், பவானி அம்மன் கோவில் தெருவில், சில மாதங்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், 70 சதவீத சாலை மட்டும் அமைக்கப்பட்டு, மீதி இடம் கிடப்பில் போடப்பட்டது.
விடுபட்ட, 200 மீ., நீளமுள்ள சாலை, மேடு பள்ளங்களோடு, குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளும், பெரும் இன்னலைச் சந்திக்கின்றனர்.
சிறுவர், பெண்கள், முதியோர் சாலையில் நடக்கும்போது, கற்கள் தடுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், விடுபட்ட இடத்தில் தரமான சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.மீனாட்சி, 32,
பெரும்பாக்கம்.