/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மின்வெட்டை நீக்க அரசு உறுதி
/
அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மின்வெட்டை நீக்க அரசு உறுதி
அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மின்வெட்டை நீக்க அரசு உறுதி
அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டுக்குள் மின்வெட்டை நீக்க அரசு உறுதி
ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : 'படிப்படியாக மின்வெட்டு தளர்த்தப்பட்டு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தின் தற்போதைய மின்உற்பத்தி, 8,000 மெகாவாட். மின்தேவையோ, 10 ஆயிரத்து 500 முதல் 11 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது. எனவே, 2,500 முதல் 3,500 மெகாவாட் வரை மின் தட்டுப்பாடு உள்ளது. இதை வெளிசந்தையில் வாங்குவதன் மூலமாகவும், காற்று மூலம் பெறப்படும் மின்சக்தியைப் பயன்படுத்துவதன் மூலமாகவும், மின்தடை கட்டுப்பாடு நடவடிக்கை மூலமும், சமாளித்து வருகிறோம்.ஊரக, நகர்ப்புற பகுதிகளில் மூன்று மணி நேரமாக இருந்த மின்வெட்டு, ஜூலை முதல், 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சக்தியின் உற்பத்திக்கேற்ப இந்த மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்ட் மாதத்திற்குள், மாநிலம் முழுவதும் முற்றிலும் நீக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்: பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பாண்டில், புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன், 3,280 மெகாவாட்டாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மின் வினியோகத்தில், கணிசமான முன்னேற்றம் இருக்கும். நடப்பாண்டில் 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9.600 கோடி ரூபாய் செலவில், 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், 3,600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக, 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.