/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி நிதி இரண்டு கோடி ரூபாயாக உயர்வு
/
எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி நிதி இரண்டு கோடி ரூபாயாக உயர்வு
எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி நிதி இரண்டு கோடி ரூபாயாக உயர்வு
எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி நிதி இரண்டு கோடி ரூபாயாக உயர்வு
ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தற்போது ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இனி, இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இதற்காக, நடப்பாண்டில் 470 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 25 லட்சம் ரூபாயை, பள்ளிகளில் குடிநீர், கழிப்பிட வசதி போன்றவற்றை அமைக்க, முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ், மேலும் 3 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற, நடப்பாண்டில் 315 கோடியே 11 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது செயல்படுத்தப்படும் அனைத்து வறுமை ஒழிப்புத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள, ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயன்பெற வழி செய்யப்படும்.