/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய மாணவர்களை வரவேற்கும் அறிமுக விழா
/
புதிய மாணவர்களை வரவேற்கும் அறிமுக விழா
ADDED : ஆக 26, 2011 01:35 AM
சென்னை : முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும், மூன்று நாள் அறிமுக விழா, வேல்ஸ் ஸ்ரீநிவாசா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக, 'நாஸ்காமின்' சென்னை மண்டல இயக்குனர் புரு÷ஷாத்தமன், ரிலாக்ஸ் அகடமியின் இயக்குனர் ரகுநாத் ஆகியோர், கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கனகசபை, பல்வேறு துறைத் தலைவர்களையும், பிற தலைமைப் பொறுப்பாளர்களையும், பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மாணவர்களிடையே, வேலை வாய்ப்புகள் பற்றியும், அதற்கு வேண்டிய திறமைகள் பற்றியும், புரு÷ஷாத்தமன் எடுத்துரைத்தார். இந்த அறிமுக விழாவில், நேற்று, உத்யோக வழிகாட்டுதல், தொழில்சார் பண்பு நலன்களை உருவாக்கிக் கொள்ளுதல், கல்லூரி வாழ்வை எதிர்கொள்ளுதல் ஆகியவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மூன்றாவது நாள் நிகழ்ச்சி, வெளிப்புறப் பயிற்சி நிகழ்ச்சியாக, இன்று நடைபெறும். இந்த நேரிடை அனுபவக் கல்வி, மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிய உதவும்.