/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் அதிக அளவு நில மோசடி வழக்குகள் முதலிடம் : மதுரை, நெல்லை, காஞ்சி மாவட்டங்களிலும் குவிந்தன
/
சென்னையில் அதிக அளவு நில மோசடி வழக்குகள் முதலிடம் : மதுரை, நெல்லை, காஞ்சி மாவட்டங்களிலும் குவிந்தன
சென்னையில் அதிக அளவு நில மோசடி வழக்குகள் முதலிடம் : மதுரை, நெல்லை, காஞ்சி மாவட்டங்களிலும் குவிந்தன
சென்னையில் அதிக அளவு நில மோசடி வழக்குகள் முதலிடம் : மதுரை, நெல்லை, காஞ்சி மாவட்டங்களிலும் குவிந்தன
ADDED : ஆக 21, 2011 02:03 AM
சென்னை : நில மோசடி வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்ட மாவட்டங்களில், சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஐந்தாமிடத்தில் உள்ளது.தமிழகம் முழுவதும், கடந்த ஆட்சியில் நிலம் அபகரிப்பு, நிலம் மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. நிலம் மோசடி தொடர்பான புகார்களை விசாரிக்க, மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் பிரிவை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். அனைத்து மாவட்டங்களிலும், நில மோசடி தொடர்பான புகார்கள் குவிந்தபடி உள்ளன. தி.மு.க., எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கைதாகி வருகின்றனர். சிலர் கைதை தவிர்க்க, ஏமாற்றியவர்களுக்கு நிலத்தை திரும்பக் கொடுக்கத் துவங்கி உள்ளனர்.கடந்த 2006ம் ஆண்டிலிருந்து, கடந்த 10ம் தேதி வரை, பதிவு செய்யப்பட்ட நில மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில், சென்னை, மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் 453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 256 வழக்குகள், சென்னை புறநகரில் 173 வழக்குகள், திருநெல்வேலியில் 156 வழக்குகள், காஞ்சிபுரத்தில் 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இவை தவிர, தேனியில் 72, விழுப்புரத்தில் 58, திருவாரூரில் 54, சிவகங்கையில் 34, கன்னியாகுமரியில் 29, ராமநாதபுரத்தில் 28, திருச்சி மற்றும் கோவையில் 27, கடலூரில் 23, சேலத்தில் 21, திண்டுக்கலில் 18, வேலூரில் 17, மதுரை புறநகரில் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாமல், அனைத்து மாவட்டங்களிலும், நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் உள்ளன.புகார் கொடுப்பவர், குற்றம் சாட்டப்படுபவர் என இரு தரப்பினரும், ஆவணங்களைக் கொண்டு வருவதால், அவற்றை பரிசீலித்து, புகார் உண்மையானதா என்பதைக் கண்டறிந்த பின்னரே, வழக்கு பதிவு செய்ய வேண்டியிருப்பதால், புகார்கள் மீது எப்.ஐ.ஆர்., போட காலதாமதம் ஏற்படுகிறது. ஆட்கள் பற்றாக்குறையும் வழக்குகளை துரிதமாக முடிக்க தடையாக உள்ளது என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.