sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் பெலாரஸ் வீரர்கள் முன்னிலை

/

 சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் பெலாரஸ் வீரர்கள் முன்னிலை

 சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் பெலாரஸ் வீரர்கள் முன்னிலை

 சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் பெலாரஸ் வீரர்கள் முன்னிலை


ADDED : ஜன 06, 2026 06:18 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில், பெலாரஸ் வீரர்கள், தலா ஐந்து புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

தமிழக சதுரங்க சங்கம் சார்பில், சக்தி குழுமத்தின் என்.மகாலிங்கம் நினைவு கோப்பைக்கான, சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி, எழும்பூரில் நடந்து வருகிறது.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உட்பட, 22 நாடுகளைச் சேர்ந்த, 13 கிராண்ட் மாஸ்டர், 23 சர்வதேச மாஸ்டர் உட்பட, 300க்கும் மேற் பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த ஐந்தாவது சுற்றில், தமிழக வீரர் ரோஹித் கிருஷ்ணா மற்றும் கேரளாவின் ஜினன் ஜோமன் இடையிலான போராட்டம் நிறைந்த ஆட்டம், டிராவில் முடிந்தது. இதனால், இருவரும் தலா 4.5 புள்ளிகளை பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில், தமிழக வீரர் ஸ்ரீஹரி, மஹாராஷ்டிராவின் பாரஸ் தீபக்கை வீழ்த்தி, 4.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார்.

அதே நேரத்தில், பெலாரஸ் வீரர் பெடரோவ் அலெக்ஸி, மேற்கு வங்கத்தின் அக்னிவோ சக்ரவர்த்தியை தோற்கடித்து, 5 புள்ளிகளை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

அவரை தொடர்ந்து, மற்றொரு பெலாரஸ் வீரர் அலெக்ஸாண்ட்ரோவ் அலெக்ஸேஜ், எகிப்தின் எல்காப்ரி மோஹ்செனை வீழ்த்தி, 5 புள்ளிகளுடன் முன்னிலை வரிசையில் இணைந்தார்.

ஐந்து சுற்றுகள் முடிவில், பெலாரஸ் வீரர்கள் இருவரும், தலா 5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்க, தமிழக வீரர்கள் 4.5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் நெருக்கமாக தொடர்கின்றனர்.






      Dinamalar
      Follow us