/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்; சென்னை மாணவர்கள் ஆதிக்கம்
/
ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்; சென்னை மாணவர்கள் ஆதிக்கம்
ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்; சென்னை மாணவர்கள் ஆதிக்கம்
ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப்; சென்னை மாணவர்கள் ஆதிக்கம்
ADDED : அக் 10, 2025 07:57 AM

சென்னை; சென்னையில், மாநில அளவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில், சென்னை பள்ளி மாணவ - மாணவியர், 15 பதக்கங்கள் குவித்து அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு சங்கம் சார்பில், மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, வேளச்சேரியில் நடந்தது. பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
சென்னை சார்பில், ஆண்கள் பிரிவில் பார்த்திபன், தினேஷ், விஷயாந்த் சசி ஆகியோர் தங்கப்பதக்கமும், சஞ்சய்ராம், மதிகரன் ஆகியோர் வெள்ளி பதக்கமும், இப்ராஹிம், ஜெயராம் கார்த்திக் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பெண்கள் பிரிவில், ஆனந்தி, லின்சி, தியா ஆகியோர் தங்கப்பதக்கமும், கியானா, யாழினி, மேகனா ஆகியோர் வெள்ளி பதக்கமும், கிருஷ்ணவேணி, சமர் சங்கர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
ஆறு தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலம் என, மொத்தம் 15 பதக்கங்கள் குவித்து சென்னை வீரர் - வீராங்கனையர் அசத்தியுள்ளனர்.