ADDED : அக் 10, 2025 07:57 AM
சென்னை வீராங்கனை 'ஜூடோ'வில் தங்கம்
முதல்வர் கோப்பை, மாநில அளவில் கல்லுாரி மாணவர்களுக்கான ஜூடோ போட்டி, பெருங்குடியில் நேற்று நடந்தது. இதில், பெண்களுக்கான 52 கிலோ பிரிவில் சென்னை சார்பில் போட்டியிட்ட சுருதி, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். கரூர் ஜனனி, திண்டுக்கல் ஜேபி பவித்ரா ரோஷினி முறையே, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர். பெண்கள் 48 கிலோ பிரிவில் சென்னையின் மெர்சி வெள்ளிப் பதக்கமும், சென்னையின் ரோசி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மாநில யோகா போட்டி ஆவடியில் 15ல் துவக்கம்
பள்ளிக்கல்வித் துறை, திருவள்ளூர் மாவட்டம் சார்பில், இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமத்தின் மாநில யோகா போட்டி, 15ம் தேதி துவங்குகிறது. ஆவடியில் உள்ள ஆலிம் முகமது சலேக் கல்லுாரியில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில், இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
- ஆசிய தடகளம் நவ., 5ல் துவக்கம்
இந்திய மாஸ்டர் தடகள கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாஸ்டர் தடகள சங்கம் சார்பில், ஆசிய அளவில் மாஸ்டர் தடகளம் - 2025 சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை நேரு விளையாட்டரங்கில், நவ., 5ல் துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது. 3,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.