/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யு - 17 யூத் கால்பந்து தகுதி சுற்று; சிறுகளத்துார் கிளப் அணி வெற்றி

ADDED : அக் 10, 2025 07:58 AM

குன்றத்துார்; அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் யு - -17 யூத் கால்பந்து லீக் போட்டி, இந்திய அளவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள், பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன.
இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 80 'புட்பால் கிளப்' அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், சென்னையை சேர்ந்த 'புட்பால் பிளஸ் கிளப்' அணி மற்றும் சிறுகளத்துார் 'புட்பால் கிளப்' அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி, சிறுகளத்துாரில் உள்ள அம்பேத்கர் திடல் கால்பந்து மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், முதல் பாதியில், 'புட்பால் பிளஸ் கிளப்' அணியினர், ஒரு கோல் அடித்து, 25 நிமிடங்கள் ஆதிக்கம் செலுத்தினர். பின் சுதாரித்து விளையாடிய சிறுகளத்துார் 'புட்பால் கிளப்' அணியினர், முதல் பாதியில் இரண்டு கோல்களும், இரண்டாம் பாதியில் நான்கு கோல்களும் அடித்து அசத்தினர்.
இறுதியில், 6 - -1 என்ற கோல் கணக்கில், சிறுகளத்துார் 'புட்பால் கிளப்' அணியினர் வெற்றி வாகை சூடி, அடுத்த போட்டிக்கு முன்னேறினர். ஐந்து கோல்கள் அடித்து வெற்றிக்கு காரணமான தரணிவேந்தன், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.