/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச சிலம்ப போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்
/
சர்வதேச சிலம்ப போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்
சர்வதேச சிலம்ப போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்
சர்வதேச சிலம்ப போட்டியில் சென்னை மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 19, 2025 12:56 AM

சென்னை:'நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்டு எஜுகேஷன் பெடரேஷன் இந்தியா' மற்றும் 'கோவா தமிழ் சங்கம்' ஆகியவை இணைந்து, சர்வதேச சிலம்ப போட்டியை கோவாவில் நடத்தின.
இந்த போட்டியில், இந்தியா, மலேஷியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும், 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 மாணவ - மாணவியரும், திருவள்ளூரைச் சேர்ந்த 36 மாணவ - மாணவியரும், சென்னையை சேர்ந்த 38 பேரும் பங்கேற்றனர்.
இதில் சென்னை அணியினர், 18 தங்கம், 12 வெள்ளி பதக்கங்கள் வென்று, சென்னை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலம்பம் அண்டு வெல்பேர் நிறுவன செயலர் கார்த்திக் பாராட்டினார்.