/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில ஜூனியர் தடகளத்தில் சென்னை அணி 'சாம்பியன்'
/
மாநில ஜூனியர் தடகளத்தில் சென்னை அணி 'சாம்பியன்'
ADDED : செப் 22, 2025 03:15 AM

சென்னை: தமிழ்நாடு தடகள சங்கத்தின் ஆதரவில், செங்கல்பட்டு மாவட்டம் தடகள சங்கம் சார்பில், 39வது மாநில ஜூனியர் தடகள போட்டி, வண்டலுாரில் உள்ள தமிழக உடற்கல்வி பல்கலையில் 18ல் துவங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது.
போட்டியின் இறுதி நாளான நேற்று மட்டும், பல்வேறு போட்டிகளில் எட்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. மொத்தம் நான்கு நாட்களில், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 25 புதிய 'மீட்' சாதனைகளை படைத்து, வீரர்கள் அசத்தினர்.
அனைத்து போட்டிகள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில் சென்னை மாவட்ட அணி 354 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. 221 புள்ளிகளுடன் திருவள்ளூர் மாவட்டம் இரண்டாமிடத்தையும், 206 புள்ளிகளுடன் கோவை அணி அடுத்த இடத்தையும் தக்க வைத்து அசத்தின.
நேற்று மாலை நடந்த பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், செயலர் லதா பரிசுகள் வழங்கினர்.