/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கோப்பை விளையாட்டு கபடியில் சென்னை அணி 'கில்லி'
/
முதல்வர் கோப்பை விளையாட்டு கபடியில் சென்னை அணி 'கில்லி'
முதல்வர் கோப்பை விளையாட்டு கபடியில் சென்னை அணி 'கில்லி'
முதல்வர் கோப்பை விளையாட்டு கபடியில் சென்னை அணி 'கில்லி'
ADDED : அக் 19, 2024 12:17 AM

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. போட்டிகள், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன.
இதில், பள்ளி, கல்லுாரி, அரசு ஊழியர்கள் என, மொத்தம் ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த பள்ளி மாணவியருக்கான கபடியில், சென்னை மாவட்ட அணி மூன்று வெற்றியுடன், 6 புள்ளிகள் பெற்று, முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது.
ஈரோடு மாவட்ட அணி, இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி வென்றது. விழுப்புரம் மாவட்ட அணி, ஒரு வெள்ளி, இரண்டு தோல்விகளுடன், 2 புள்ளிகள் பெற்று, வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.
மாணவர்களுக்கான கபடியில், துாத்துக்குடி, திருநெல்வேலி முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
எழும்பூரில் நடந்த கல்லுாரி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், துாத்துக்குடி மூன்று வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று, முதலிடத்தை தட்டிச் சென்றது.
செங்கல்பட்டு அணி, இரண்டு வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், கோவை அணி, ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 3 புள்ளிகள் பெற்று, மூன்றாம் இடத்தையும் வென்றன.
நேற்று, கல்லுாரி பிரிவினருக்கான குத்துத்துச்சண்டை போட்டியில், சென்னை, செங்கல்பட்டு வீரர், வீராங்கனையர் அசத்தினர்.

