/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில பேட்மின்டன் போட்டி சென்னை அணி சாம்பியன்
/
மாநில பேட்மின்டன் போட்டி சென்னை அணி சாம்பியன்
ADDED : ஜூன் 24, 2025 12:32 AM
சென்னை, மாநில அளவிலான பேட்மின்டன் போட்டியில், சென்னை அணியினர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
'டீம் 16 ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், 'தி அல்டிமேட் பேட்மின்டன் ஷோ டவுன்' எனப்படும் மாநிலப் பேட்மின்டன் போட்டி, சென்னை நீலங்கரையில் உள்ள அன்லீச் பேட்மின்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மாநிலத்தில் சிறந்த பேட்மின்டன் வீரர், வீராங்கனைகள் தனி நபர் மற்றும் குழுவாக மோதுகின்றனர்.
ஆடவருக்கான 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சென்னை மாணவர்கள் அஸ்வின் அதிகப் புள்ளிகள் பெற்று முதல் இடமும், ரக் ஷன் இரண்டாம் இடமும் பிடித்தனர்.
ஆடவருக்கான 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், சென்னை மாணவர் சாய் வர்ஷன் முதல் இடம், ஆரவ் இரண்டாம் இடம் பெற்றனர்.
தொடர்ந்து, ஆடவருக்கான 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், சென்னையின் சாய் வர்ஷன் முதலிடம், அருண் சாய் இரண்டாம் இடம் பெற்றனர்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், சென்னை சேர்ந்த அபிலாஸ் மற்றும் சச்சின் ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
தொடர்ந்த நடந்த, மகளிர் 11 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவு போட்டியில், சென்னை மாணவி நக்சத்திரா முதலிடமும், சென்னை மாணவி ஆதிரா இரண்டாம் இடமும் பெற்றனர்.
மகளிர் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் மேகன் முதலிடம், சாமிக்கா சுதீப் இரண்டாமிடமும் பெற்றனர்.
இறுதியாக நடந்த மகளிர் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், சென்னையின் மேகா, அமிலியா முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
***