/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் சென்னை அணி வெற்றி
/
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் சென்னை அணி வெற்றி
ADDED : டிச 20, 2024 12:45 AM

சென்னை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான டி - 20 கிரிக்கெட் போட்டியில், சென்னை லெஜென்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.
சைக்கிள் பியூர் அகர்பத்தி சார்பில், கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு அருகில் உள்ள ஆலுார் கே.எஸ்.சி.ஏ., மைதானத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி- 20 கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. இதன் மூன்றாவது லீக் தொடரின் இறுதிப் போட்டியில், பெங்களூரு ஈகிள்ஸ் அணியும், சென்னை லெஜென்ட்ஸ் அணியும் மோதின.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வீரர்கள் இந்த விளையாட்டை எதிர்கொண்டனர். இதில், சென்னை அணி, 53 ரன்கள் வித்தியாசத்தில், வெற்றிபெற்றது. இதில், சென்னை வீரர் சுரேஷ் செல்வம், 43 பந்துகளில், 111 ரன்களை எடுத்தார்.
மற்றொரு வீரர் ஜெனிஷ் ஆண்டோவின் பந்துவீச்சில், நான்கு ஓவர்களில், 24 ரன்கள் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், சென்னை அணியின் வெற்றி எளிதானது.