/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை டைட்டன்ஸ் அணி 'கிக் பாக்சிங்'கில் தடுமாற்றம்
/
சென்னை டைட்டன்ஸ் அணி 'கிக் பாக்சிங்'கில் தடுமாற்றம்
சென்னை டைட்டன்ஸ் அணி 'கிக் பாக்சிங்'கில் தடுமாற்றம்
சென்னை டைட்டன்ஸ் அணி 'கிக் பாக்சிங்'கில் தடுமாற்றம்
ADDED : அக் 26, 2025 01:24 AM
சென்னை: சென் னையில் நடந்து வரும் 'கிக் பாக்சிங்' ப்ரீமியர் லீக் போட்டியின் முதல் நாள் முடிவில், சென்னை டைட்டன்ஸ் அணி 18 போட்டிகளில் ஐந்தில் மட்டும் வெற்றி பெற்று, தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் மற்றும் ஸ்போர்டோராமா இணைந்து நடத்தும், மாநில அளவிலான கிக் பாக்சிங் ப்ரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள குத்துச்சண்டை அரங்கில் நடந்து வருகிறது.
இதில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட ஐந்து அணிகள் போட்டி யிடுகின்றன.
ஒவ்வொரு அணியிலும் 12 பேர் வீதம், மொத்தம் 60 வீரர் - வீராங்கனையர், 12 சுற்றுகளாக போட்டியிடுகின்றனர்.
நேற்று முன்தினம், சென்னை டைட்டன்ஸ் அணி 18 போட்டிகளை சந்தித்தது. இதில் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
எதிர்த்து விளை யாடிய கோவை, சேலம் உள்ளிட்ட அணிகள் வென்றன.
போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

