/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காந்தி சில்க் பஜார் கண்காட்சி துவக்கம்
/
காந்தி சில்க் பஜார் கண்காட்சி துவக்கம்
ADDED : அக் 25, 2025 11:45 PM
சென்னை: திருவான்மியூர் கலாசேத்ரா வளாகத்தில், 'காந்தி சில்க் பஜார்' கண்காட்சி நேற்று துவங்கியது.
தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சி கழகமும், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் அபிவிருத்தி ஆணையம் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியை, அமைச்சர் அன்பரசன் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அன்பரசன் கூறுகையில், ''நவ., 17ல், மாமல்லபுரத்தில் நடைபெறும் விழாவில், 426 கைவினை கலைஞர்களுக்கு, மாநில அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் இருந்து, 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.
கண்காட்சியில், தமிழக கைவினை பொருட்களுக்கான 40 அரங்குகள், பிற மாநிலங்களின் பொருட்களுக்கான 110 அரங்குகள் என, 150 அரங்குகள் உள்ளன.
கண்காட்சி, நவ., 2 வரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம்.

