/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி ஓ.எம்.ஆரில் 10 கி.மீ., நெரிசல்
/
சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி ஓ.எம்.ஆரில் 10 கி.மீ., நெரிசல்
சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி ஓ.எம்.ஆரில் 10 கி.மீ., நெரிசல்
சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி ஓ.எம்.ஆரில் 10 கி.மீ., நெரிசல்
ADDED : அக் 25, 2025 11:44 PM

ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார், குமரன் நகர் பகுதிகளில், நேற்று மாலை பெய்த மழை, அப்பகுதி சாலைகளில் தேங்கியது. இச்சாலையின் பல இடங்களில் பள்ளம் இருந்ததால், வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. துரைப்பாக்கம் முதல் செம்மஞ்சேரி வரை 10 கி.மீட்டருக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார், பள்ளத்தில் மண் கொட்டி சரி செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின், மோட்டார் கொண்டு வந்து வெள்ளம் வெளியேற்றப்பட்டது.
போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'வெள்ளம் தேங்கும் பகுதிகள் குறித்தும், பருவமழை முடியும் வரை அங்கு நிரந்தர மோட்டார் அமைப்பது குறித்தும், சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம், ஏற்கனவே கூறி உள்ளோம்.
'அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'மெட்ரோ ரயில் பணியின் போது எதிர்பாராத இடங்களில் பள்ளம் தோண்டினர். அதில் சிமென்ட் கலவை கொட்டி சமன்படுத்தி இருந்தாலும், அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் தேங்குகிறது' என்றனர்.

