/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டிக்கு இடம் மாறுகிறது சென்னை பல்கலை மெரினா வளாகம்
/
கிண்டிக்கு இடம் மாறுகிறது சென்னை பல்கலை மெரினா வளாகம்
கிண்டிக்கு இடம் மாறுகிறது சென்னை பல்கலை மெரினா வளாகம்
கிண்டிக்கு இடம் மாறுகிறது சென்னை பல்கலை மெரினா வளாகம்
ADDED : அக் 09, 2025 02:30 AM

சென்னை சென்னை பல்கலையின் மெரினா வளாகத்தில் இயங்கும் துறைகள், கிண்டி வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளன.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி ஆகிய இடங்களில், சென்னை பல்கலை வளாகங்களில் உள்ளன. திருவல்லிக்கேணியில் இயங்கும் மெரினா வளாக இரண்டடுக்கு கட்டடங்கள், 90 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.
இதனால், துாண்கள், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரையும் சிதிலமடைந்துள்ளது. இதை, பழமை மாறாமல் சீரமைப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை ஏற்றுள்ளது.
அதற்கான பணிகளை துவங்கும் வகையில், வளாகத்தை காலி செய்து தரும்படி, பொதுப்பணித்துறை, பல்கலை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மெரினா வளாகத்தில் இயங்கும் அரபு, பாரசீகம், உருது ஆகிய வெளிநாட்டு மொழியியல் துறைகளும், ஹிந்தி, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் - மொழி, இலக்கியம் ஆகிய ஒன்பது துறைகளும், கிண்டி அண்ணா பல்கலைக்கு அருகில் உள்ள கிண்டி வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
ஜெ.பி.ஏ.எஸ் இஸ்லாமிய ஆய்வு மையம், திருக்குறள் ஆய்வு மையம் உள்ளிட்டவையும் விரைவில் மாற்ற, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.