/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரிப்பன் மாளிகை வளாகத்தில் ' முதல்வர் மருந்தகம் ' திறப்பு
/
ரிப்பன் மாளிகை வளாகத்தில் ' முதல்வர் மருந்தகம் ' திறப்பு
ரிப்பன் மாளிகை வளாகத்தில் ' முதல்வர் மருந்தகம் ' திறப்பு
ரிப்பன் மாளிகை வளாகத்தில் ' முதல்வர் மருந்தகம் ' திறப்பு
ADDED : அக் 09, 2025 02:30 AM
சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தின் பெரியமேடு சாலை பகுதியில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில், முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தகத்தை மேயர் பிரியா துவக்கி வைத்தார். சென்னை மாவட்டத்தில், 44 முதல்வர் மருந்தகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், ஒன்பது மருந்தகங்கள் தொழில் முனைவோர்களும், 35 மருந்தககங்கள் கூட்டுறவு நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல்வர் மருந்தகத்தில் கொள்முதல் விலையில் இருந்து, 25 சதவீதம் தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, வெளி சந்தையில், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், பாராசிட்டமால் மாத்திரை 4.73 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சிலவகை மருந்துகளும், 8.16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் வாங்கி பயன்பெற வேண்டும் என, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.