/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய முதியோர் நல மருத்துவமனையில் மருந்து வாங்க காத்திருப்பதால் அவதி
/
தேசிய முதியோர் நல மருத்துவமனையில் மருந்து வாங்க காத்திருப்பதால் அவதி
தேசிய முதியோர் நல மருத்துவமனையில் மருந்து வாங்க காத்திருப்பதால் அவதி
தேசிய முதியோர் நல மருத்துவமனையில் மருந்து வாங்க காத்திருப்பதால் அவதி
ADDED : அக் 09, 2025 02:31 AM

சென்னை, தேசிய முதியோர் மருத்துவமனையில், மருந்து வாங்க முதியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் இரண்டாவது முதியோர் நல மருத்துவமனையான இங்கு, 60 வயதுக்கு ஏற்பட்டோருக்கு மட்டும் பிரத்யேக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில், தினமும் 1,000க்கும் மேற்பட்ட முதியோர், இதயம், சிறுநீரகவியல், கல்லீரல் மற்றும் வயது மூப்பில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் மருந்து வாங்க தினமும் முதியோர் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. சில நாட்களில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மருந்திற்காகவே வரிசையில் நிற்பதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், மருந்து, மாத்திரை வினியோகிக்க கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என, முதியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
முதியோர் மருத்துவமனையை பொறுத்தவரையில், ஐந்து மருந்தாளுனர்கள் பணியில் உள்ளனர். மூன்று வரிசையில், மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது.
இளைஞர்கள் போல், முதியவர்கள் வேகமாக நடக்க மாட்டார்கள். அவர்கள் மெதுவாக தான் வருவார்கள். அதனால், வரிசையும் வேகமாக செல்லாது. ஒரு முதியவரே, சில நிமிடங்கள் எடுத்து கொள்வார். இதில், யாரையும் குறை கூற முடியாது.
முதியவர்கள் நிற்கக்கூடாது என்பதற்காக அனைத்து பகுதியிலும், நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மருந்து எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிவிக்க உதவி மையங்களும் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.