/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 ஆண்டாக முடியாத பூங்கா பணி ஒப்பந்ததாரரை கண்டித்த எம்.எல்.ஏ.,
/
3 ஆண்டாக முடியாத பூங்கா பணி ஒப்பந்ததாரரை கண்டித்த எம்.எல்.ஏ.,
3 ஆண்டாக முடியாத பூங்கா பணி ஒப்பந்ததாரரை கண்டித்த எம்.எல்.ஏ.,
3 ஆண்டாக முடியாத பூங்கா பணி ஒப்பந்ததாரரை கண்டித்த எம்.எல்.ஏ.,
ADDED : அக் 09, 2025 02:31 AM

சித்தாலப்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், நேற்று நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமிற்கு, காலை 10:30 மணிக்கு, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் வருகை தந்தார்.
அப்போது, உடனடி தீர்வு கிடைத்தவர்களுக்கு சான்று வழங்கினார். பின், சித்தாலப்பாக்கம் ஏரியின் கலங்கல் நீர் வெளியேறும் கால்வாயை பார்வையிட்டு, அதில் சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீர் செய்து, கால்வாயை துார் வாருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள திருவள்ளுவர் நகர் பிரதான சாலையை ஆய்வு செய்து, அதை புதிதாக அமைக்க வழிவகை செய்யுமாறு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறினார்.
மேலும், கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்ட திருவள்ளுவர் நகர் பூங்கா பணி, மூன்று ஆண்டுகளாகியும் முடிவடையாததைக் கண்டு, ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்து, இரண்டு மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்குமாறு உத்தரவிட்டார்.