/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலை மண்டல கிரிக்கெட் எம்.ஓ.பி.வைஷ்ணவா முதலிடம்
/
சென்னை பல்கலை மண்டல கிரிக்கெட் எம்.ஓ.பி.வைஷ்ணவா முதலிடம்
சென்னை பல்கலை மண்டல கிரிக்கெட் எம்.ஓ.பி.வைஷ்ணவா முதலிடம்
சென்னை பல்கலை மண்டல கிரிக்கெட் எம்.ஓ.பி.வைஷ்ணவா முதலிடம்
ADDED : ஜன 23, 2025 12:08 AM

சென்னை, சென்னை பல்கலையின் மண்டல கிரிக்கெட் போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லுாரி முதலிடத்தை பிடித்தது.
சென்னை பல்கலையின் மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி., ஜெயின் கல்லுாரியில், கடந்த 20ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.
போட்டியில், எம்.ஓ.பி. வைஷ்ணவா, எத்திராஜ் மற்றும் 'ஏ' மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணிகள் மோதின. முதல் போட்டியில், 'ஏ' மண்டல இணைப்பு அணி, முதலில் பேட்டிங் செய்து, 15 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 112 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த, எம்.ஓ.பி., வைஷ்ணவா அணி, 15 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 113 ரன்களை எடுத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், எம்.ஓ.பி.வைஷ்ணவா, 15 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 126 ரன்களை எடுத்தது. எதிர்த்து விளையாடிய, எத்திராஜ் அணி, 15 ஓவர்களில், ஆறு விக்கெட் இழந்து, 67 ரன்களில் சுருண்டது.
கடைசி சுற்று ஆட்டத்தில், எம்.ஓ.பி. வைஷ்ணவா முதலில் பேட்டிங் செய்து, 15 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து, 158 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய, 'பி' மண்டல இணைப்பு அணி, 15 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து, 48 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
அனைத்து போட்டிகளின் முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவா முதலிடத்தையும், 'ஏ' மண்டல இணைப்பு அணி இரண்டாமிடத்தையும், எத்திராஜ் மற்றும் 'பி' மண்டல இணைப்பு அணி, முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.

