/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வீல் சேர் டென்னிஸ் தமிழக வீரர்கள் கலக்கல்
/
சென்னை வீல் சேர் டென்னிஸ் தமிழக வீரர்கள் கலக்கல்
UPDATED : ஜூலை 24, 2025 07:33 AM
ADDED : ஜூலை 24, 2025 12:55 AM

சென்னை, தேசிய அளவில் நடக்கும் வீல் சேர் டென்னிஸ் போட்டியில், துவக்க ஆட்டத்தில் தமிழக வீரர்கள் அசத்தினர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் இந்தியம் நிறுவனம் இணைந்து, தேசிய அளவில் 4வது இந்தியன் ஏ.ஐ.டி.ஏ., டென்னிஸ் தொடர், நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானம் நடந்து வருகிறது.
இதில், வீல் சேர் டென்னிஸ் போட்டி, நேற்று துவங்கியது. நாடு முழுதும் இருந்து ஆடவர் பிரிவில் 26, மகளிர் பிரிவில் ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.
இதன் ஆடவர் பிரிவு போட்டியில், தமிழகத்தின் அருள், கர்நாடகாவின் மலயாத்திரியை விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தின் அருள் 9 - 2 என, எதிர்த்து விளையாடிய மலயாத்திரியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் விளையாடிய தமிழகத்தின் அலெக்சான்டர் ஜேம்ஸ், கர்நாடகாவின் பசவராஜை எதிர்த்து மோதினார். இதில் 4 - 9 என்ற புள்ளியில், அலெக்சான்டர் ஜேம்சை தோற்கடித்து, பசவராஜ் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் விளையாடிய தமிழகத்தின் அலெக்சான்டர் ஜேம்ஸ், கர்நாடகாவின் பசவராஜை எதிர்த்து மோதினார். இதில் 4 - 9 என்ற புள்ளியில், அலெக்சான்டர் ஜேம்சை தோற்கடித்து, பசவராஜ் வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் சுரேஷ்குமார், மற்றொரு தமிழக வீரர் ஆனந்த குமாரை எதிர்த்து மோதினார். இதில் சுரேஷ்குமார் 9 - 1 என்ற புள்ளியில் வெற்றி பெற்றார்.
நாளை ஒத்திவைப்பு போட்டி நடுவே மழை பெய்ததால், பாதியுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஆடவர் பிரிவு போட்டியும், மகளிர் பிரிவு போட்டியும், நாளை ஒத்திவைக்கப்பட்டது.