/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேப்பாக்கம் ஸ்டார் மேக்கர்ஸ் ஹாக்கியில் இன்று மோதல்
/
சேப்பாக்கம் ஸ்டார் மேக்கர்ஸ் ஹாக்கியில் இன்று மோதல்
சேப்பாக்கம் ஸ்டார் மேக்கர்ஸ் ஹாக்கியில் இன்று மோதல்
சேப்பாக்கம் ஸ்டார் மேக்கர்ஸ் ஹாக்கியில் இன்று மோதல்
ADDED : மார் 15, 2025 12:46 AM
சென்னை, மார்ச் 15-
சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் அணிகளுக்கான ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கின்றன.
வேளச்சேரி கிளப், எம்.சி.சி., - அடையார் யங்கஸ்ட், இந்திரா காந்தி உள்ளிட்ட 33 அணிகள் பங்கேற்றுள்ளன.
மொத்தம் எட்டு குழுக்களாக பிரிந்து, லீக் முறையில், வார இறுதி நாட்களில் மட்டும் மோதுகின்றன.
இன்று காலை 6:00 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில், ஜெய்ஹிந்த் கிளப் - பிரண்ட்ஸ் ஹாக்கி கிளப் அணிகளும், 7:00 மணிக்கு சேப்பாக்கம் யங்கஸ்ட் - ஸ்டார் ஆப் மேக்கர்ஸ் அணிகளும் மோத உள்ளன.
அதேபோல், 8:00 மணிக்கு அபிபுல்லா மெமோரியல் - ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.