
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஸ் போட்டி
'நியூ பிரின்ஸ்' கல்வி குழுமம் சார்பில், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான 2வது செஸ் போட்டி, சென்னை, சந்தோஷபுரத்தில் கடந்த 11ம் தேதி நடந்தது. இதில், சர்வதேச தரம் வாய்ந்த 25 வீரர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, நியூ பிரின்ஸ் குழும தலைவர் லோகநாதன், துணை தலைவர் நவீன் பிரசாத் பரிசுகள் வழங்கினர். அவர்களுடன் கல்லுாரி இயக்குனர் சுவாமி நாதன், முதல்வர் சரவணன், உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் பங்கேற்றனர்.

