ADDED : நவ 17, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி மற்றும் சாரதா சிறுவர்கள் அகாடமி இணைந்து, மாநில அளவிலான செஸ் போட்டிகள், மேற்கு தாம்பரத்தில் உள்ள சாரதா சிறுவர்கள் அகாடமி வளாகத்தில், இன்று காலை நடக்கின்றன.
ஒரு நாள் மட்டும் நடக்கும் இப்போட்டியில் 7, 9, 11, 13 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கு தனித்தனியாக நடக்க உள்ளன.
இருபாலரிலும் முதலிடத்தை பிடிக்கும் தலா 15 பேருக்கு, கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. போட்டிகள் 'பிடே' விதிப்படி, சுவிஸ் அடிப்படையில் நடக்கின்றன. ஒவ்வொறு சுற்றும் 20 நிமிடங்கள் அடிப்படையில் நடக்கின்றன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட பல மாவட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.