/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
/
கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
ADDED : பிப் 04, 2026 05:25 AM
சென்னை: 'கோழிக்கழிச்சல் நோயைத் தடுக்கும் தடுப்பூசி முகாம்கள் துவங்கப்பட்டுள்ளன' என, தமிழக கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.
கோடைக் காலங்களில் கோழிகளை தாக்கும் வெள்ளைக்கழிச்சல் நோயை கட்டுப்படுத்தவும், கோழிகள் இறப்பதை தவிர்க்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகளுக்கு, தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோழிக்கழிச்சல் நோய்க்கு சிகிச்சை இல்லை, தடுப்பூசி மட்டுமே தீர்வு. இந்நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மை உடையது. கோடையை முன்னிட்டு, சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலைங்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து இடங்களிலும், தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி வரை நடக்கும் தடுப்பூசி முகாம்களுக்கு, கோழிகளை கொண்டு வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

