/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெள்ள தடுப்புக்கான பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
/
வெள்ள தடுப்புக்கான பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
வெள்ள தடுப்புக்கான பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
வெள்ள தடுப்புக்கான பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவு
ADDED : மே 21, 2025 12:40 AM
சென்னை :'தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை வைத்து, அனைத்து வெள்ள தடுப்பு பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டும்' என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் பகுதியில் நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி வாயிலாக, 17.3 கி.மீ., பகிங்ஹாம் கால்வாயில், 'ரோபோட்டிக் எக்ஸ்வேட்டர்' வாகனங்கள் வாயிலாக, ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
திரு.வி.க.,நகர் டெமல்லஸ் சாலையில், 17.5 கோடி ரூபாயில், மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடக்கின்றன.
இந்த மழைநீர் கால்வாய், முனுசாமி கால்வாயில் இருந்து பகிங்ஹாம் கால்வாயை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.
இதனால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அங்களாம்மன் கோவில் தெரு, ராஜா தோட்டம், பழைய ஆடுதொட்டி சாலை, கே.எம்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
ஓட்டேரியில் 10.3 கி.மீ., நீளம் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் துார்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் முள்வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஓட்டேரியில் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று, திடீரென ஆய்வு செய்தார்.
'தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை வைத்து, மாநகர் முழுதும் நடந்துவரும் வெள்ள தடுப்பு பணிகளையு விரைந்து முடிக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், குடிநீர் வாரிய இயக்குனர் வினய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
***