sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இல்ல திருமண வரவேற்பு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

/

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இல்ல திருமண வரவேற்பு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இல்ல திருமண வரவேற்பு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இல்ல திருமண வரவேற்பு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


ADDED : ஜூலை 12, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்கள் என, ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர்.

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான சக்கரபாணி- - ராஜலட்சுமி தம்பதியின் மகள் தீப்தா.

இவருக்கும், காங்கேயம், மகாராஜா ரைஸ் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மகாராஜா மஹால் நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி- - விஜயலதா தம்பதியின் மகன் சிவபிரதீப்புக்கும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கடந்த ௭ம் தேதி திருமணம் நடந்தது.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கில் நேற்று மாலை நடந்தது.

இவ்விழாவில், முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் நேரில் வாழ்த்தினர். முதல்வர், துணை முதல்வருக்கு, வெள்ளி செங்கோலை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பெரியசாமி, ராமச்சந்திரன், அன்பரசன், சேகர்பாபு, ரகுபதி, சுப்பிரமணி, நாசர், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு.

மேலும், எம்.பி.,க்கள் ராஜா, டி.ஆர்.பாலு, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் ராதாகிருஷ்ணன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாவட்ட செயலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

விழாவிற்கு வந்தோரை, அமைச்சர் சக்கரபாணியும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.

சிறுவர்கள் குதுாக லிக்கும் வகையில் சிறப்பு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்தோர் புகைப்படம் எடுத்துக் கொள்ள வசதியாக நுழைவாயிலில், 'செல்பி பாயின்ட்' வைக்கப்பட்டிருந்தது.

தடபுடல் வரவேற்பு, உபசரிப்பால் விழாவிற்கு வந்தோர் பெரிதும் மகிழ்ந்தனர்.

சங்குப்பூ இடியாப்பம்

வரவேற்பில், 'மாதம்பட்டி நாகராஜ் அன்கோ'வின் விருந்து 'பப்பே, தலைவாழை இலை விருந்து' என, பரிமாறப்பட்டது. இனிப்பு வகையில், ராயல் வால்நட்பர்பி, மேங்கோ ஐஸ் பால்ஸ், பாம்சுகர், பருத்திப்பால் அல்வா, பாம்பே ஜாங்கிரி.உணவு வகையில் தட்டு இட்லி, தக்காளி குழம்பு, ஆம்பூர் தம் பிரியாணி, பட்டர் நாண், மதுரை கொத்து பரோட்டா, மாப்பிள்ளை சம்பா தயிர்சாதம், சங்குப்பூ இடியாப்பம், கார்லில் நுாடுல்ஸ், தோசை வகைகள் உள்ளிட்டவை இடம் பெற்றன. விதவிதமான ஐஸ்கிரீம் இடம் பெற்றன.



அமர்க்களம்

அரங்க நுழைவாயிலில் தென்னை, பனை, கரும்பு, வாழை உள்ளிட்டவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது, திருமண வரவேற்புக்கு வந்தோரை வெகுவாக கவர்ந்தது.விழாவில், 'நான் வயலினிஸ்ட்' இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியை, பங்கேற்றோர் வெகுவாக ரசித்தனர்.








      Dinamalar
      Follow us