/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
/
மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
ADDED : பிப் 14, 2025 12:25 AM

சென்னை, மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., நீளத்தில், 128 ரயில் நிலையங்களுடன் நடந்து வருகிறது.
இதில் மூன்றாவது வழித்தடத்தில், 26.7 கி.மீ., நீளத்தில், மாதவரம்- கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் - தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் - தரமணி சுரங்க வழித்தடத்தில், கிரீன்வேஸ் மெட்ரோ ரயில் நிலையம், அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் ஆகியவை அமைகின்றன.
இப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியில், அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், 2023 ஜூன் மாதம் ஈடுபடுத்தப்பட்டது.
பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமாக பாறைகள், அதிக நீரோட்ட பகுதிகள் மற்றும்நகர பகுதிகளுக்கான இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக கடந்து, அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் அருகில், இந்த இயந்திரம் வெளியே வந்துள்ளது.
அடையாறு ஆற்றின் கீழ், 40 ----- - 50 அடி ஆழத்தில், 300 மீட்டர் நீளத்திற்கு, ஆற்றின் கீழ் செல்லும் வழித்தட பகுதி உட்பட, 1.21 கி.மீ., துாரத்தை இந்த இயந்திரம் கடந்துள்ளது.
இதேபோல, 2024 செம்டம்பரில், காவிரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணிகளை துவங்கியது. இது 'டவுண் லைன்' சுரங்கம் தோண்டும் பணியை முடித்துள்ளது.
இந்த இயந்திரம், அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது.
இந்த பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அப்போது, நகராட்சிநிர்வாகத் துறை அமைச்சர் நேரு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறப்பு முயற்சிகள் துறை செயலர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் சித்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

