/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சானடோரியம் மருத்துவமனை வரும் 31க்குள் முதல்வர் திறப்பு
/
சானடோரியம் மருத்துவமனை வரும் 31க்குள் முதல்வர் திறப்பு
சானடோரியம் மருத்துவமனை வரும் 31க்குள் முதல்வர் திறப்பு
சானடோரியம் மருத்துவமனை வரும் 31க்குள் முதல்வர் திறப்பு
ADDED : ஜூலை 11, 2025 12:30 AM

குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியத்தில் 110 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட மருத்துவமனை கட்டடம், வரும் 31ம் தேதிக்குள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. இதை மாவட்ட மருத்துவமனையாக மாற்ற கோரிக்கை எழுந்தது.
இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 2023, பிப்ரவரியில் 110 கோடி ரூபாய் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதன் கட்டுமான பணிகள் முடிந்து, இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இம்மருத்துவமனை கட்டடத்தை, அமைச்சர் அன்பரசன், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி மற்றும் ராஜா, செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அமைச்சர் அன்பரசன் கூறுகையில், “ஆறு மாடிகள் உடைய இக்கட்டடத்தில், நான்கு அறுவை சிகிச்சை அரங்கங்கள், மூன்று அவசர அறுவை சிகிச்சை அரங்கங்கள், 111 தீவிர சிகிச்சை படுக்கைகள், 289 படுக்கைகள் கொண்ட பொதுப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் அமைகின்றன.
''எஞ்சிய பணிகள், 20 நாட்களில் முடிக்கப்பட்டு, இம்மாத இறுதியில், முதல்வர் ஸ்டாலின் இம்மருத்துவமனையை திறந்து வைப்பார்,” என்றார்.

