/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.15 கோடியில் முதல்வர் படைப்பகம்
/
ரூ.15 கோடியில் முதல்வர் படைப்பகம்
ADDED : ஜூலை 10, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, ஆறாவது அவென்யூவில், 15.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ள 'முதல்வர் படைப்பகம்' நுாலகத்திற்கு, அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டினார்.
கடந்த 40 ஆண்டுகளாக செயல்படும் நுாலக கட்டடம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் அதை இடித்து, அதே இடத்தில் சி.எம்.டி.ஏ., சார்பில் முதல்வர் படைப்பகம் கட்டப்படுகிறது. 32.878 சதுர அடியில், மூன்று தளங்களுடன் படைப்பகம் கட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.