ADDED : அக் 11, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், மொத்தமுள்ள 36 விளையாட்டுகளில், தமிழகம் முழுதும் இருந்து 33,000 வீரர்கள், இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 4ம் தேதி முதல், இறுதி சுற்றுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் துவங்கின. நேற்று முன்தினம் வரையிலான ஆட்டங்களில், சென்னை மாவட்ட அணி 9 தங்கம், 2 வெள்ளி, 9 வெண்கலம் என, மொத்தம் 20 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
6 தங்கம், 1 வெள்ளி என, மொத்தம் 7 பதக்கங்களுடன் செங்கல்பட்டு இரண்டாம் இடத்திலும், 5 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என, மொத்தம் 9 பதக்கங்களுடன், ஈரோடு மூன்றாம் இடத்திலும் உள்ளன.