ADDED : ஜன 27, 2025 02:23 AM
கொருக்குப்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் - பிரமிளா தம்பதிக்கு, லித்திஷா என்ற 2 வயது குழந்தை உள்ளது. பிரமிளா, குழந்தை லித்திஷாவை அழைத்து கொண்டு, கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் 2வது தெருவில் வசிக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
குழந்தை லித்திஷா, வீட்டில் இருந்த கேரட் சாப்பிட்டு விட்டு விளையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்தது.
குடும்பத்தினர் குழந்தையை மீட்டு, தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. கேரட் சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறலால் இறந்ததாக கூறப்படுகிறது. கொருக்குப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.