/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
/
தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
ADDED : அக் 27, 2025 02:55 AM
சென்னை: தேனாம்பேட்டையில், தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி சந்தானலட்சுமி. இவர்களுக்கு தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
மூன்று நாட்களுக்கு முன், சந்தானலட்சுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலு என்பவருக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை பார்க்க குழந்தையுடன் சென்றுள்ளார்.
உடல் நலம் விசாரித்துவிட்டு குழந்தையை பார்த்தபோது, காணாமல் போனதை அறிந்து தேடி உள்ளார். அப்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் பக்கெட்டில், குழந்தை தலைக்குப்புற விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தையை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை உயிரிழந்தது.
சம்பவம் குறித்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

